மன்னார் மாவட்டத்திற்கு என 'தீயணைப்பு பிரிவு' ஒன்றை உடனடியாக ஏற்படுத்தக் கோரிக்கை. அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு.
மன்னார் மாவட்டத்திற்கு என 'தீயணைப்பு பிரிவு' ஒன்றை உடனடியாக ஏற்படுத்தக் கோரி மன்னார் மாவட்ட வளர் பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்துடன் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களிடம் இன்று புதன் (19) கிழமை மதியம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட வளர் பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களிடம் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மன்னார் மாவட்டத்திற்கு என இது வரை தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீப்பற்றி எரிந்த பல சம்பவங்கள் உண்டு.
எனவே குறித்த சம்பவங்களை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட வளர் பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பினால் மன்னார் மற்றும் முசலி பிரதேசத்திற்குற்பட்ட பல கிராமங்கள் இணைந்து இப்பிரச்சினையை தீர்க்க கோரியுள்ளனர்.எனவே இப்பிரச்சினையை எமது அமைப்பு சார்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்படப்பட்டுள்ளது.
-குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர்,குறித்த விடையம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வருடத்திற்குள் மன்னார் மாவட்டத்திற்கு என 'தீயணைப்பு பிரிவு' ஒன்றை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட வளர் பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பின் பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களிடம் கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,
மன்னார் மாவட்டத்திற்கு என இது வரை தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் வீடுகள் மற்றும் பொது இடங்கள் தீப்பற்றி எரிந்த பல சம்பவங்கள் உண்டு.
எனவே குறித்த சம்பவங்களை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட வளர் பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பினால் மன்னார் மற்றும் முசலி பிரதேசத்திற்குற்பட்ட பல கிராமங்கள் இணைந்து இப்பிரச்சினையை தீர்க்க கோரியுள்ளனர்.எனவே இப்பிரச்சினையை எமது அமைப்பு சார்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்படப்பட்டுள்ளது.
-குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர்,குறித்த விடையம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வருடத்திற்குள் மன்னார் மாவட்டத்திற்கு என 'தீயணைப்பு பிரிவு' ஒன்றை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்திற்கு என 'தீயணைப்பு பிரிவு' ஒன்றை உடனடியாக ஏற்படுத்தக் கோரிக்கை. அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு.
Reviewed by Author
on
February 20, 2020
Rating:

No comments:
Post a Comment