சாள்ஸ் நிர்மலநாதனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பிரதமர் மஹிந்த -
நாடாளுமன்றத்தில் இன்று மகாவலி குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது சார்ள்ஸ் முன்வைத்த கேள்விகளுக்கு முழுமையான பதிலை அளிக்கமுடியாமல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தடுமாறிய நிலையில் ஒரு சில கருத்துக்களை மாத்திரமே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிலையில் பிரதமர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
1988/2007 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் தமிழ் மக்களின் விவசாய இடங்களாக கருதப்படும் குறிப்பிட்ட பகுதியானது மகாவலி எல் பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் நீர்வளம் மிக்க பகுதிகளில் 162 தமிழ் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் எந்தவிதமான சிங்கள ஊடுருவல் இடம்பெறவில்லை. அதேபோல அங்கு சிங்கள விவசாயிகளை குடியமர்த்தவும் இல்லை.< சிங்கள விவசாயிகள் அங்கு விவசாயம் செய்யவும் இல்லை. இந்த காணிகளுக்கு உரிய முறையில் உரிமை பத்திரங்களை விவசாயிகளக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் இங்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மகாவலி அதிகார சபை முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளது.
அதேபோல பிரதேச செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளுக்கு உரிமை பத்திரம் வழங்குவதற்காக நாம் விண்ணப்பங்கள் கோரியுள்ளோம். ஆனால் இதுவரை ஒரு விண்ணப்பம் கூட எமக்கு கிடைக்கவில்லை.
எனவே அந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. விண்ணப்பங்கள் கிடைக்கும் வரை எமக்கு எதனையும் செய்ய முடியாமல் உள்ளது. இருந்த போதும் நெலும் வெவ வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான சுமார் நான்காயிரம் ஏக்கர் காணியில் மக்கள் விவசாயம் செய்தார்கள்.
அப்பகுதிகள் இரண்டும் ஒன்றிணைத்து இப்போது நெலும் வெவ என்று ஒரு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சிங்கள மக்களுக்கு 1154 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு 1988 இல் பிரித்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அனுமதி மற்றும் உரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிரிஇப்பன்வெவ எனப்படும் ஆமையன் குளம் எனப்படும் பகுதியில் 239 ஏக்கர் நிலத்தில் விவசாயம் முன்னெடுக்கப்பட்டதாக கூறினாலும் அப்பகுதி பழமை வாய்ந்த குளம் என கண்டறியப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு எவ்வித விவசாய நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை, என்று கூறியுள்ளார்.
சாள்ஸ் நிர்மலநாதனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பிரதமர் மஹிந்த -
Reviewed by Author
on
February 06, 2020
Rating:

No comments:
Post a Comment