அண்மைய செய்திகள்

recent
-

இரகசியங்கள் நிறைந்த யோகி பாபு திருமணம்


காமெடி நடிகர் யோகி பாபு ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டவர். இப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காமல் தவிக்கும் இயக்குனர்கள் பலர்.

இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்று காலை பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார்.

அனைவரும் இவருக்கு வாழ்த்து கூறிவர யோகி பாபு திருமணத்தில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

முதலில் மணப்பெண் வீட்டில் இருந்து அவரது அம்மா-அப்பா கூட திருமணத்தில் இல்லை.

திருமணத்தில் மொத்தமாகவே 10 பேர் தான் கலந்து கொண்டிருக்கின்றனர்.

முருக பக்தரான யோகி பாபு திருமணத்தை முதலில் திருத்தணியில் நடத்த முடிவு எடுத்திருக்கிறார்.

பின் அங்கு செய்த ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு கடைசி நேரத்தில் திருமணத்தை செய்யாறுக்கு மாற்றியுள்ளார்.

அவரது திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர்களுக்கே திருமணம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டது இன்று காலையில் தான் தெரிந்திருக்கிறது.

ஜாம் ஜாம் என்று நடத்த வேண்டிய திருமணத்தை யோகி பாபு இப்படி ரகசியமாக பல அதிரடி திருப்பங்களுடன் ஏன் செய்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த கதை.

இரகசியங்கள் நிறைந்த யோகி பாபு திருமணம் Reviewed by Author on February 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.