யாழில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பமான சக்கர நாற்காலி பயணம் முடிவு -
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த சக்கர நாற்காலி பயணமானது இலங்கையின் பல பகுதிகளிற்கு சென்று 18 நாட்களின் பின்னர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சுற்று பயணம் நிறைவடைந்துள்ளது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட் அலி மற்றும் ஜெகதீஸ்வரன், சகோதர மொழி பேசும் பிறேமசந்திர (தவிர்க்க முடியாத காரணத்தால் இடைவழியில் பயணத்தை முடித்துகொண்டவர்) ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்தி இலங்கை முழுவதுமான சுற்றுபயணத்தை சக்கர நாற்காலி மூலம் மேற்கொண்டிருந்தனர்.
யாழில் ஆரம்பித்த குறித்த பயணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிற்கு சென்றிருந்ததுடன், அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வவுனியா பொது அமைப்புகளால் இன்றைய தினம் தமது பயணத்தை முடித்து கொண்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியாவில் வாடி வீட்டில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிறினிவாசன் தலைமையில் இடம்பெற்றதுடன், இருவரும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
யாழில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பமான சக்கர நாற்காலி பயணம் முடிவு -
Reviewed by Author
on
February 19, 2020
Rating:

No comments:
Post a Comment