முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 78360 பேர் தகுதி -
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 78360 பேர் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது.
அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 5555 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அதேவேளை துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 7639 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 24626 பேரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 25167 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 11935 பேரும், மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 3438 பேருமாக மொத்தம் 78360 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்தோடு குறித்த 78360 பேர் வாக்களிப்பதற்காக 136 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெற உள்ளது.
அந்த வகையிலே மாந்தை கிழக்கில் 15 வாக்கெடுப்பு நிலையங்களும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 20 வாக்கெடுப்பு நிலையங்களிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 21 வாக்கெடுப்பு நிலையங்களிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 49 வாக்கெடுப்பு நிலையங்களிலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 26 வாக்கெடுப்பு நிலையங்களிலும், மணலாறு பிரதேச செயலக பிரிவில் 5 வாக்கெடுப்பு நிலையங்களிலுமாக மொத்தமாக 136 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
அத்தோடு வாக்குப் பெட்டி விநியோகம், வாக்கு பெட்டி கையேற்பு, மற்றும் வாக்கெண்ணும் பணிகள் இம்முறை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெறுவதற்கு உள்ளது எனவும் ஆரம்பகட்ட ஒழுங்கமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது. 16ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இருப்பினும் 16ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்புகின்றவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலைமையை தவிர்க்கும் பொருட்டு நேரடியாக தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் குறிப்பாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை தேர்தல் திணைக்களத்தில் கொண்டுவந்து ஒப்படைக்குமாறும் கோரியுள்ளார்.
இதேவேளை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களும் உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல் வகுப்புகளும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தேர்தல் தொடர்பில் ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் 021-3204352 என்கின்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 021-2290033 என்ற தொலை நகல் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 78360 பேர் தகுதி -
Reviewed by Author
on
March 15, 2020
Rating:

No comments:
Post a Comment