மன்னார் அடம்பனில் முன் மாதிரியாக செயல் பட்ட அடம்பன் பொலிஸார்-படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குற்பட்ட குடும்பங்களுக்கு அடம்பன் பொலிஸ் நிலைய பொலிஸாரின் நிதி உதவியுடன் 20-03-2020 வெள்ளிக்கிழமை மதியம் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர்.லக்ஸ்மன் ரன்வெல ஆராட்சி அவர்களின் ஏற்பாட்டில் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் நிதி பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய உலர் உணவுகள் அடங்கிய பொதி கையளிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமுல் படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிமுதல் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.
இந்த நிலையிலே மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொதிகளை அடம்பன் பொலிஸ் நிலைய பொலிஸாரின் நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
March 28, 2020
Rating:

No comments:
Post a Comment