கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக கால்பந்து ஜாம்பவான்கள் கொடுத்த நிதியுதவி! எவ்வளவு தெரியுமா? -
சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 19,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பார்சிலோனா அரசு மருத்துவமனை ஒன்றுக்கு 1 மில்லியன் யூரோ நிதியுதவி அளித்துள்ளார்.

மெஸ்ஸியின் முன்னாள் மேலாளரும் கொரோனா தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை வாங்க 8 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
மற்றொரு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய ஏஜெண்ட் ஜார்ஜ் மெண்டஸும் லிஸ்பன், போர்டோவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 8.27 கோடி நிதியுதவி செய்துள்ளார்கள்.
மெஸ்ஸி உள்ளிட்ட 28 பிரபல கால்பந்து வீரர்கள், கொரோனா குறித்த பிபாவின் விழிப்புணர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக கால்பந்து ஜாம்பவான்கள் கொடுத்த நிதியுதவி! எவ்வளவு தெரியுமா? -
Reviewed by Author
on
March 26, 2020
Rating:
No comments:
Post a Comment