மன்னார் தனியார் மருந்தகங்கள் அனைத்து பல்பொருள் அங்காடிகளும் அடைப்பு
மன்னார் மாவட்டம் உட்பட வட மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் இன்று கடுமை படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு இயங்கி வந்த அனைத்து தனியார் மருந்தகங்களும் பல்பொருள் அங்காடிகளும் நேற்றைய அரசாங்க உத்தரவின் படி முழுமையாக மூடப்பட்டுள்ளது
அதே நேரத்தில் போலீசார் அனுமதி இன்றி வீதிகளில் நடமாடுகின்றன நபர்கள் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
அத்துடன் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொலிசார் மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்கள் மூலம் நடமாடும் சேவைகள் ஊடாக கிராம ரீதியாகவே வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பாக வாழ்வாதார தொழிகளான மீன்பிடி விவசாய செயற்பாடுகளில் பாதுகாப்பான முறையில் ஈடுபடுவதற்காக அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அதிகமாக மக்கள் நடமாடிய பகுதிகளில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் நகரசபை ஊழியர்கள் ஊடக இடம் பெற்று வருகின்றது.
இன்றைய தினம் விசேட நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினரும் அதிகளவான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
March 29, 2020
Rating:

No comments:
Post a Comment