கொரோனாவை சாதகமாக்கும் இலங்கை அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் -
இலங்கையில் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் போர் கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும், சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளி சுனில் ரத்நாயக்க விடுதலை தொடர்பிலும் இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ் போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துமாறு, இலங்கையின் ஐ.நா வதிவிடபிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் போர் கைதிகள் இலங்கை அரசின் பின்புலத்துடன் சிங்களக்கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்போர் கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள் தமிழ்போர் கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்குதமிழ் கைதிகள் மறுத்திட்ட நிலையில், தமிழ் கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ் கைதிகளை படுகொலைசெய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்தசம்பவங்கள் இலங்கையின் கடந்த கால வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.
இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த குற்றவாளி சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கையில் நீதிக்கான வெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான நீதியினைப் பெறமுடியும் என மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை 'இலங்கை' பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனாவை சாதகமாக்கும் இலங்கை அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் -
Reviewed by Author
on
March 30, 2020
Rating:

No comments:
Post a Comment