சுவிஸ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த இலங்கையரின் இறுதிக் கிரியை -
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த நபரின் இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய குறித்த நபர் கடந்த 25ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இவரது இறுதிக் கிரியைகள் அந்த நாட்டிலேயே இடம்பெறும் எனவும், அது தொடர்பாக சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த இலங்கையரின் இறுதிக் கிரியை -
Reviewed by Author
on
March 29, 2020
Rating:

No comments:
Post a Comment