URBI ET ORBI - உர்பி எட் ஆர்பி சிறப்பு இறையாசீர்.....
27-03-2020 இன்று இரவு.... உர்பி எட் ஆர்பி (Urbi et Orbi) என்ற லத்தீன் சொற்றொடருக்கு நகருக்கு (ரோம்) மற்றும் உலகிற்கு என்பது பொருளாகும். திருத்தந்தை அவர்களால் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் வழங்கப்படுகின்ற இந்த இறையாசீரனது 13 ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிரகோரி அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்பு நாளன்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை உடனடியாக வத்திக்கான் மேல் மாடத்தில் தோன்றும் போதும் ஒரு மாநாட்டை முடிக்கும் போதும் மட்டுமே புனித பேதுரு பசிலிக்கா பேராலய சதுக்கத்தில் கூடியிருக்கும் மக்களுக்கு, திருத்தந்தை இந்த இறையாசீரை வழங்குவார்.
இத்தகைய சூழலில், கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இந்த உலகம் விடுதலையடைய இன்று 27.03.2020 (இலங்கை நேரம்) இரவு 10.30 மணிக்கு, ஆள் ஆரவரமற்ற புனித பேதுரு பசிலிக்கா பேராலய சதுக்கத்தில் சிறப்பு இறைச்செய்தியோடு 'உர்பி எட் ஆர்பி' என்ற சிறப்பு இறையாசீரையும் வழங்க இருக்கிறார்.
NEWS MEDIA
WWW.NEWMANNAR.LK
URBI ET ORBI - உர்பி எட் ஆர்பி சிறப்பு இறையாசீர்.....
Reviewed by Author
on
March 28, 2020
Rating:

No comments:
Post a Comment