ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் மரணம்..! அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா...
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா தற்போது 203 நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
வல்லரசு நாடுகளிலே ஆதிக்கம் கொண்ட அமெரிக்காவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அங்கு மட்டும் 2,15,215 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகிலே அதிக கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
மேலும், தற்போது வரை 5,110 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் மட்டும் 1,300 பேர் பலியாகியுள்ளனர்.
சமீபத்தில் நியூயார்க் மாகாணத்தில் தனிமைப்படுத்துதலை அமல்படுத்த தேவையில்லை என டிரம்ப் பரிந்துரைத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் 26,885 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 1,029 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோர் மரணம்..! அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா...
Reviewed by Author
on
April 02, 2020
Rating:

No comments:
Post a Comment