கொரோனாவால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் நஷ்டம்... இழப்பீடு கோரி பில் அனுப்பிய ஜேர்மனி: ஆத்திரத்தில் சீனா! -
ஏராளமான உயிர்களை பலிகொண்டு, உலகின் பொருளாதார நிலையையும் கடுமையாக பாதித்துவிட்ட கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடும் வெறுப்பில் உள்ளன.
இந்நிலையில், ஜேர்மனி சீனாவுக்கு பில் ஒன்றை அனுப்பியுள்ளது. உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் என்று கூறி, பில் ஒன்றை அனுப்பியுள்ளது ஜேர்மனி.
அந்த பில்லில், சுற்றுலா இழப்புக்காக 27 பில்லியன் யூரோக்களும், திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்புக்காக 7.2 பில்லியன் யூரோக்களும், விமான சேவையில் ஏற்பட்ட இழப்புக்காக ஒரு பில்லியன் யூரோக்களும், சிறு தொழில்களில் ஏற்பட்டுள்ள இழப்புக்காக 50 பில்லியன் யூரோக்களும், சீனா தங்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள சீனா, இது அயல்நாட்டு வெறுப்பையும் தேசியவாதத்தையும் தூண்டும் செயல் என விமர்சித்துள்ளது.


கொரோனாவால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் நஷ்டம்... இழப்பீடு கோரி பில் அனுப்பிய ஜேர்மனி: ஆத்திரத்தில் சீனா! -
Reviewed by Author
on
April 21, 2020
Rating:
No comments:
Post a Comment