இலங்கை கடற்படையை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று! வெலிசறை முகாம் முடக்கம் -
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெலிசறை கடற்படை முகாம் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கடற்படை வீரர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனை அறிக்கைகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒரே நாளில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை கடற்படையை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா தொற்று! வெலிசறை முகாம் முடக்கம் -
Reviewed by Author
on
April 24, 2020
Rating:

No comments:
Post a Comment