வடக்கில் தனிமைப்படுத்தல்மையங்கள் இன்னும் உருவாகும்- இராணுவத் தளபதி தெரிவிப்பு -
வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது.
நாட்டில் எங்காவது ஓரிடத்தில் கொரோனா நோயாளி அடையாளப்படுத்தப்பட்டால் அந்தப் பகுதியிலுள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” - என்றார்.
வடக்கில் தனிமைப்படுத்தல்மையங்கள் இன்னும் உருவாகும்- இராணுவத் தளபதி தெரிவிப்பு -
Reviewed by Author
on
April 24, 2020
Rating:

No comments:
Post a Comment