கொரோனாவை கட்டுப்படுத்திய டாப் 5 நாடுகளின் பட்டியல்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிற்கு பின், குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் ஒரு சில நாடுகள் இந்த கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. இதற்கு அந்த நாடுகள் எடுத்த தீவிர நடவடிக்கை என்று அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான ICMA நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், நியூசிலாந்து முதல் இடத்திலும், இலங்கை 9-வது இடத்திலும் உள்ளது.
உலகின் வல்லரசு நாடுகள் என கருதப்படும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, இந்தியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை பின் தள்ளி, இலங்கை இந்த இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தலைவர்கள் மற்றும் நாடுகள் முன்னெடுத்துள்ள சுகாதார கட்டமைப்பு தயார் நிலைமை குறித்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள இலங்கை அதிகாரிகள் விழிப்புணர்வுடன் கடமையாற்றியதாக ICMA நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவம் மற்றும் தேசிய உளவுத்துறை ஆகியன எச்சரிக்கையுடன் இருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் பிரித்தானியா 89-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 88-வது இடத்திலும், பிரான்ஸ் 92-வது இடத்தையும், கனடா 7-வது இடத்தையும், ஜேர்மனி 16-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை கட்டுப்படுத்திய டாப் 5 நாடுகளின் பட்டியல்!
Reviewed by Author
on
April 19, 2020
Rating:
No comments:
Post a Comment