பிரித்தானியாவில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 15,000-ஐ தாண்டி செல்லும் துயரம் -
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஒரு லட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14-ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 888 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்களை விட அதிகம்.

நேற்று 547 பேரும், வியாழக் கிழமை 861-ம் உயிரிழந்திருந்தனர். தற்போது இன்றைய பலியானவர்களை சேர்த்து, நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணி 15-ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது 15,464 -ஆக உள்ளது.
மருத்துவமனையில் இறப்புகளைப் பதிவு செய்வதில் தாமதம் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கத் தவறியதால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 11-ஆம் திகதிக்கு பிறகு இன்று கொரோனாவால் இன்று அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். 11-ஆம் திகதி 917 பேரும், அதே 10-ஆம் திகதி 980 பேரும், 8-ஆம் திகதி 938 பேரும் என்று பதிவாகியிருந்தது.
தற்போது மருத்துவமனைகளில் இருக்கும் மட்டும் இறப்புகளே அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுயாதீன பராமரிப்பு இல்லங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் அமைப்பான Care England பராமரிப்பு இல்லங்களில் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு 7,500 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறுவதால், இறப்பின் மதிப்பு உச்சத்தை தொடலாம் என்று கருதப்படுகிறது.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) ஏப்ரல் 3-ஆம் திகதி வரை பராமரிப்பு இல்லங்களில் 207 மரணங்களை பதிவு செய்தது. ஆனால் கேர் இங்கிலாந்து தன்னிடம் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் கூறும் தரவு இருப்பதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! 15,000-ஐ தாண்டி செல்லும் துயரம் -
Reviewed by Author
on
April 19, 2020
Rating:
No comments:
Post a Comment