முடிவுக்கு வந்த ஊரடங்கு...சீனா- வுஹான் நகரில் இருந்து ஒரே நாளில் வெளியேறிய 55000 மக்கள் -
இதனால் ஒரே நாளில் சுமார் 55 ஆயிரம் மக்கள் வுஹான் நகரில் இருந்து ரயில் மற்றும் பேருந்து மூலம் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் முற்றாக விலகாத நிலையிலும், இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் தொடர்பில் நிர்வாகம் கலந்தாலோசித்து வருவதாக கூறப்படும் நிலையிலும் பொதுமக்களுக்கு வுஹான் நகரில் இருங்து வெளியேறும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 மில்லியன் மக்கள் வசித்து வந்த வுஹான் நகரை கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சீன நிர்வாகம் மொத்தமாக முடக்கியது.
வுஹான் நகரில் இருந்து காய்ச்சல் தொடர்பான வைரஸ் தொற்று பரவலாக பரவியதை அடுத்து இந்த முடிவுக்கு வந்தது சீன நிர்வாகம்.
நீண்ட 76 நாட்களுக்கு பின்னர் ஊரடங்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த புதனன்று நள்ளிரவு முதல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டதுடன் முதல் ரயில் பொதுமக்களுடன் புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து அதே வேளை, வுஹான் நகரின் மொத்த பிரதான சாலைகளும் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
வெளி மாகாணங்களில் இருந்து வுஹானில் ஊரடங்கு காலத்தில் சிக்கிக்கொண்ட பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
வுஹான் நகரில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் 2,571.
இது ஒட்டுமொத்தமாக சீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம்.
ஊரடங்கு காலகட்டத்தில் வுஹான் நகரம் பொலிசாரின் ரோந்து நடவடிகையும், சுகாதார பணியாளர்களின் நடமாட்டமும் மட்டுமே காணப்பட்டது.
பேய் நகரமாக காணப்பட்ட வுஹானில் தற்போது பொதுமக்கள் நடமாடத் தொடங்கியுள்ளனர்.
முடிவுக்கு வந்த ஊரடங்கு...சீனா- வுஹான் நகரில் இருந்து ஒரே நாளில் வெளியேறிய 55000 மக்கள் -
Reviewed by Author
on
April 16, 2020
Rating:

No comments:
Post a Comment