கொரோனாவில் புதிய ஆய்வு முடிவு - விஷ்வரூபம் எடுத்துள்ள A2a மரபணு வைரஸ்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் 10 மரபியல் மாற்றங்களை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
A2a மரபணு மாற்ற வைரஸ் அதிக எண்ணிக்கையில் நுரையீரலுக்கும் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. தொற்று பரவ அதிக திறன் வாய்ந்ததாக இருப்பதால், உலக அளவில் இது சர்வசாதாரணமாக பரவுகிறது என்று மேற்கு வங்கத்தில் இருக்கும் National institue of Biomedical Genomics விஞ்ஞானிகள் நிதன் பிஸ்வாஸ், பார்த்தா மஜீம்தார் ஆகியோர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
“ஒ” என்ற ஆதார வைரசில் இருந்து 10 மரபணு மாற்றம் வைரஸாக உருவெடுத்தாக கூறப்படும் ஆய்வு, கடந்த மாதம் இறுதியில் இதர மரபணு வைரஸ்களை ஓரம் கட்டிவிட்டு A2a வைரஸ் விஸ்வரூபம் எடுத்து விட்டது என்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகள் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் இதழில் வெளியாகியுள்ளது.
கொரோனாவில் புதிய ஆய்வு முடிவு - விஷ்வரூபம் எடுத்துள்ள A2a மரபணு வைரஸ்!
Reviewed by Author
on
April 28, 2020
Rating:

No comments:
Post a Comment