அடம்பன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு நீர் வழங்கல் திட்டத்தின் பிரதான நீர் விநியோகக் குழய்களில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ள உள்ளமையினால் விடத்தல் தீவு நீர் வழங்கல் திட்டத்திற்கு உற்பட்ட பகுதிகளில் நாளை (2) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை நீர் வினியோக துண்டிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அடம்பன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு நீர் வழங்கல் திட்டத்திற்கு உற்பட்ட பள்ளமடு, விடத்தல் தீவு, கள்ளியடி, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், கோவில்குளம் மற்றும் ஆத்திமோட்டை ஆகிய பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(2) காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரையுமாக 4 மணி நேர நீர் துண்டிப்பு இடம் பெறவுள்ளதாக அடம்பன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நீர் பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அடம்பன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்.
Reviewed by Author
on
April 02, 2020
Rating:

No comments:
Post a Comment