வயதானவர்களுக்கு!... கொரோனாவும் வந்துவிட்டால்... என்ன செய்ய வேண்டும்? -
இந்த வைரஸ் வயது அல்லது பாலினம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை. ஆனால் உலகளவில் வயதானவர்கள் இந்த வைரஸால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்களுக்கு தாங்க முடியாத கடுமையான சிக்கல்களை இந்த வைரஸ் கிருமி உண்டாக்கி வருகிறது.
வயதானவர்கள் மட்டும் அல்ல, சர்க்கரை நோயாளிகள் அல்லது நெடுநாளாக இருக்கும் இதய நோய் பிரச்சினை கொண்டவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த வகை நோயாளிகளுக்கு கொரோனாவால் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டு இறப்புகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே ஆகும்.
பெரும்பாலோருக்கு மூட்டுவலி உள்ளது. கீல்வாதத்துடன் தொடர்புடைய வலி மற்றும் வீக்கம், கடுமையான கீல்வாத பிரச்சனை இவையெல்லாம் உடலை உள்ளிருந்து சேதப்படுத்துகின்றன. அதனால் இவை எல்லாம் வைரஸ் உடலைத் தாக்குவதை எளிதாக்கிவிடும்.
ஆட்டோ இம்யூன் மற்றும் மூட்டு அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் நோயாளிகளுக்கு பல வைரஸ் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
எனவே நீங்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை சந்திக்கும் போது, நீங்கள் இதுவரை எடுக்கும் மருந்துகளைப் பற்றி சுகாதார நிபுணர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இதனால் அதற்கேற்ப அவரால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உங்களிடம் COVID-19 வைரஸிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டால், உங்கள் மருத்துவர் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
நோயெதிர்ப்பு-அடக்குமுறைக்கு (immune-suppression) பதிலாக நோயெதிர்ப்பு-பண்பேற்றத்தை (immune-modulation) உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். இதை ஸ்டெம் செல்கள் சிகிச்சை மூலம் செய்யலாம்.
இது ஒரு மீளுருவாக்கம் செய்யும் மருந்து சிகிச்சையே தவிர வேறு எதுவுமில்லை. இது நோயெதிர்ப்பு-அடக்குமுறை சிக்கலைத் தவிர்க்கிறது.
மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் COVID-19 வைரஸ் உள்ளிட்ட உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வயதானவர்களுக்கு!... கொரோனாவும் வந்துவிட்டால்... என்ன செய்ய வேண்டும்? -
Reviewed by Author
on
April 19, 2020
Rating:

No comments:
Post a Comment