கொரோனா கட்டுப்பாடு: மலேசியாவில் இந்தோனேசிய தொழிலாளர்கள் பசியில் வாடக்கூடிய அபாயம்
மலேசியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசிய தொழிலாளர்களின் நிலையை கவனிக்கமாறு இந்தோனேசிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“மலேசியாவில் பெரும்பாலான இந்தோனேசிய தொழிலாளர்கள் கட்டிடத் தொழில், தொழிற்சாலை, உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உணவு உடனடித் தேவையாக இருக்கின்றது. கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசிய தூதரகம் வழியாக உணவினை வழங்கும்படி இந்தோனேசிய அரசை கேட்டுக் கொள்கிறோம்,” என இந்தோனேசியாவின் கோல்கர் கட்சியின் சார்பாக கிறிஸ்டினா அரயனி.
முன்னதாக, மலேசியாவில் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு, தற்போது ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
“மலேசியாவில் உள்ள இந்தோனேசிய தொழிலாளர்கள் கொரோனாவை கண்டு அஞ்சவில்லை. வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் பசியுடன் நாட்களை கழிக்க நேரிடும் என அஞ்சுகிறார்கள்,” எனக் கூறியுள்ளார் இந்தோனேசிய குடிமக்கள் தீர்மான மையத்தின் இயக்குனர் ஜைனுல் அரிபின்.
அத்துடன், பல இந்தோனேசியர்கள் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கும் நிலையும் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அரிபின். “மேலும் சிலர் முறையான அனுமதியின்றி பணியாற்றுகின்றனர். உதாரணத்திற்கு, தோட்டத்தொழிலில் ஈடுபட சிலர் அனுமதி பெற்றிருப்பார்கள். ஆனால், அதற்கு பதிலாக உணவகங்களில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இதனால் இதுபோன்ற இந்தோனேசியர்கள் மீது அக்கறை கொள்ள சட்டரீதயாக எந்த முதலாளிகளும் இருக்க மாட்டார்கள்,” என அரிபின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தற்போதைய நிலையில், மலேசியாவில் 3,116 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்தோனேசியர்கள் போன்று மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் வாழ்வாதாரப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Reviewed by Author
on
April 03, 2020
Rating:

No comments:
Post a Comment