இலங்கை தமிழரசு கட்சி மன்னார் மாவட்ட கிளையினரால் மாற்று திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு-PHOTOS,VIDEO
உலகம் பூராகவும் கொரோனா நோயின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
தமிழர் தாயகம் எங்கும் இந்த அவசர கால நிலமையில் வறுமையை எம் மக்கள் அன்றாடம் எதிர் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் கிளையினர் மன்னார் மாவட்த்தில் உள்ள மாற்று திறனாளிகள் அமைப்பான தேனீ அமைப்பினரிடம் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 500 உலர் உணவு பொதிகளை மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் கட்சியின் அலுவலகத்தில் வைத்து 08-04-2020 புதன் கிழமை காலை கையளிக்கப்பட்டது.
இவ் உணவுப் பொதிகள் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவடட மாற்று திறனாளிகள் தேனீ அமைப்பின் தலைவர் பெனில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியினருக்கு மாற்று திறனாளிகள் சார்பில் நன்றிகளையும் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி மன்னார் மாவட்ட கிளையினரால் மாற்று திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு-PHOTOS,VIDEO
Reviewed by Author
on
April 09, 2020
Rating:

No comments:
Post a Comment