பெருந்தொகை வெளிநாட்டு நிதியுதவி கிடைத்தும் பில்லியன் கணக்கில் அரசாங்கம் ஏன் பணத்தை அச்சிடுகின்றது -
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளிநாட்டு நிதியுதவியாக 127431 மில்லியன் கிடைத்துள்ளதாகவும்,அதில் சுய தொழில் மற்றும் அன்றாடம் ஊதியம் பெறும் 42 லட்சம் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினாலும் அரசாங்கத்திடம் 106432 மில்லியன் ரூபாய் அதாவது 10 ஆயிரத்து 643 கோடி ரூபாய் இருக்க வேண்டும்.
மீதமுள்ள இந்த நிதியுதவியின் மூலம் என்ன செய்ய போகின்றது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இந்த பணம் சுகாதார உபகரணங்கள், மருந்து, வைத்தியசாலை நிர்மாணிப்பு, வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உட்பட எதற்கு பயன்படுத்த போகிறது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.
இதனிடையே அரசாங்கம் 200 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 182 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 195 ஆக அதிகரித்தது.
அத்துடன் இதன் காரணமாக கடன் சுமையானது வட்டியின்றி 520 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.அத்துடன் அரசாங்கம் மேலும் 100 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பிடத்தக்களவு நிதி உதவியாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிலையில், ஏன் பணம் அச்சிடப்படுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் எனவும் மரிக்கார் கூறியுள்ளார்.
பெருந்தொகை வெளிநாட்டு நிதியுதவி கிடைத்தும் பில்லியன் கணக்கில் அரசாங்கம் ஏன் பணத்தை அச்சிடுகின்றது -
Reviewed by Author
on
April 27, 2020
Rating:

No comments:
Post a Comment