வெசாக் வாரம் மே 10ம் திகதி வரை நீடிப்பு! சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை -
உத்தியோகபூர்வ வெசாக் வாரத்தை மே 10ம் திகதி வரை நீடிக்க பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 4ம் திகதி முதல் உத்தியோகபூர்வ வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பொது மக்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பௌத்த கொடியினை ஏற்றுமாறு புத்தசாசன அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, வெசாக் வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறாமல் மத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.
அத்துடன், இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மக்கள் பின்பற்ற வேண்டிய தேவையான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே இந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி இந்த வெசாக் காலப்பகுதியில் மத நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெசாக் வாரம் மே 10ம் திகதி வரை நீடிப்பு! சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை -
Reviewed by Author
on
May 07, 2020
Rating:

No comments:
Post a Comment