இனி எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொரோனா இருக்க போகின்றது! -
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கொரோனா எங்கள் வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கும் என்பதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.
கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் என்பன கட்டாயமாக கடைப்பிடித்தேயாக வேண்டும்.
இல்லாவிட்டால் நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அது முழுமையாக பரவும் நிலை ஏற்படும்.
இருவருக்கிடையில் சம்பாசனை இடம்பெறும்போது இருவரும் முகக்கவசம் போட்டு கலந்துரையாடுவர்களாயின் நோய் தொற்று 1.5 வீதமாக காணப்படும்.
அத்துடன் சமூக இடைவெளியும் பின்பற்றப்படுமாக இருந்தால் இந்த தொற்று வீதம் மேலும் குறைவடையும். எனினும் இலங்கையில் பலருக்கு கொரோனாவின் தாக்கம் முக்கியமான பிரச்சனையாக தெரியவில்லை.
சாப்பாட்டுக்கடைகளை திறக்குமாறு நாம் கூறியிருந்தபோதிலும் அவர்கள் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்தார்.
இனி எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொரோனா இருக்க போகின்றது! -
Reviewed by Author
on
May 07, 2020
Rating:

No comments:
Post a Comment