5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதிலிருந்து பிரதேச, கிராம அரசியல்வாதிகளை நீக்குமாறு கோரிக்கை
5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாட்டிலிருந்து பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர், பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர், சிறுவர் விவகார, சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
5000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது, ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் , தமது கட்சியை வலுப்பெறச் செய்யும் வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிதி வழங்கும் செயற்பாட்டில், வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு இடம் வழங்க வேண்டாம் என அனைத்து அதிகாரிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதிலிருந்து பிரதேச, கிராம அரசியல்வாதிகளை நீக்குமாறு கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
May 20, 2020
Rating:

No comments:
Post a Comment