கிண்ணியாவில் ஆடை விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு
திருகோணமலை – கிண்ணியா நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களை இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடுமாறு கிண்ணியா நகரசபை உத்தரவிட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் கிண்ணியா நகரில் ஒன்று கூடும் சன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபை தவிசாளர் S.H.M.நளீம் தெரிவித்துள்ளார்.
தாம் தனியாக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் கிண்ணியா பிரதேச சபை செயலாளர், சுகாதார பணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களுடன் இணைந்து ஆலோசித்த பின்னரே ஆடை விற்பனை நிலையங்களை மூடும் தீர்மானத்தை எடுத்ததாகவும் கிண்ணியா நகர சபை தவிசாளர் கூறினார்.
எவ்வாறாயினும், வியாபாரிகள் தொலைபேசி மூலம் கொள்வனவாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு விற்பனையை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கிண்ணியாவில் ஆடை விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
May 20, 2020
Rating:

No comments:
Post a Comment