இலங்கையில் இன்று முதல் காற்றுடன் கூடிய கடும் மழை....
இன்று 26ஆம் திகதி முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை
மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர்
வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கலவான, இரத்தினபுரி, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, நிவித்திகல ஆகிய
பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.கேகாலை
மாவட்டத்தின் புளத்கொஹூப்பிட்டிய, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும்
யட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனைத்தவிர, நுவரெலியா
மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும்
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு
நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்
அத்துடன், இரத்தினபுரி
மாவட்டத்தின் அயகம, எலபாத, கிரிஎல்ல, கொடக்கவெல்ல, கஹவத்த, கொலன்ன ஆகிய பிரதேச
செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை மற்றும்
மாவனெல்ல பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய
கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இன்று முதல் காற்றுடன் கூடிய கடும் மழை....
Reviewed by Author
on
May 26, 2020
Rating:

No comments:
Post a Comment