வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (25) நடைபெற்றது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல் விழாவின் ஆரம்பமாக இன்று பாக்கு தெண்டல் உற்சவம் நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி பொங்கல் உற்சத்தை 9 வீடுகளுக்கு அறிவிக்கும் முகமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அடுத்த ஏழாவது நாள் கடல் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு விளக்கேற்றப்படவுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட 59 ஆவது படையினரின் ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் 30 வேப்பமரக் கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.
இந்த மரநடுகை நிகழ்வில் ஆலய பிரதம குருக்கள், 59 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரோரா, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
May 25, 2020
Rating:

No comments:
Post a Comment