சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் A/L நேர அட்டவணை பொய்யானது
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை என கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணத்தில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் கருத்திற்கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பாடசாலை சமூகம் உள்ளிட்ட அனைவரும் அறிவுறுத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த போலியான நேர அட்டவணை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஆணையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் A/L நேர அட்டவணை பொய்யானது
Reviewed by NEWMANNAR
on
May 25, 2020
Rating:

No comments:
Post a Comment