முகக்கவசங்களை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது
முகக்கவசங்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.
செவனகல பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (19) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
முகக்கவசங்களை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
May 19, 2020
Rating:

No comments:
Post a Comment