பிரதமரின் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்ட உறுதி! வெளிப்படுத்தும் செல்வம் அடைக்கலநாதன் -
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமை தொடர்பில் பிரதமருடனான கூட்டத்தில் பேசப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமருடனான கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த கூட்டத்தின் போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாங்கள் பல கருத்துக்களை எடுத்து சொன்னோம்.
இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார் என செல்வம் அடைக்கலநாதன் சுட்டடிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்ட உறுதி! வெளிப்படுத்தும் செல்வம் அடைக்கலநாதன் -
Reviewed by Author
on
May 07, 2020
Rating:

No comments:
Post a Comment