இலங்கை சைவநெறிக் கழகத்தின் இரண்டாம் கட்ட உதவி நடவடிக்கை
புத்தளத்தில் கற்பிட்டிப்பிரதேசத்தில் தமிழர் கிராமத்தில் மேற்கொண்ட அடிப்படை உணவுபொருட்கள் வழங்கல் பணியினைத் தொடர்ந்து,இருசெயற்திட்டங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1)மலையகத்தில் அட்டன் நகரில், சாமிமலை நகருக்கு அண்மையில் பெயர்லோன் தோட்டத்தில் உள்ள 46 குடும்பங்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் அடிப்படை உணவுப்பொருட்டுகள் வழங்கப்பட்டன. ஒருகுடும்பத்திற்கு 1000 ரூபாய் உணவுப்பொருட்கள் என்னும் செயற்திட்டத்திற்கு அமைவாக, 46 குடும்பங்களுக்கு 46000 ரூபாய் நிதி ஒதுகீடு செய்யப்பட்டு, மேற்படி உதவித்திட்டம்
24ம் திகதி ஏப்பிரல் மாதம் கழகத்தினால்
மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியினை இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களும்Vinotharuban Sinnarasha, பிரதிச்செயலாளர் திரு.கோ.இளையராஜா அவர்களும் Gopal Ilayaraja மேற்பார்வைசெய்து ஒழுங்குபடுத்தியிருந்ததோடு, மதிப்புக்குரிய அதிபர் திரு.பரசுராமன் சங்கர் (மமா/ அவ / கார்பெக்ஸ் கல்லூரி) அவர்கள் முன்னின்று
செவ்வனே நிறைவேற்றித்தந்தார்.
கொரொனா நோய்குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களிடம் எடுத்துச்சொல்லப்பட்டதுடன், இவ் உதவிச்செயற்திட்டத்தின்போது சுகாதார விழுமியங்கள் முழுமையாகக் கைக்கொள்ளப்பட்டது.
2)தெனியாய சைவ முன்னேற்றக் கழகம் தெனியாய-பல்லேகம பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் உதவிச் செயற்திட்டங்களுக்கு கைகொடுக்கும் வகையில், தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்திற்கு ரூபாய் 10,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் (05-05-2020)வழங்கப்பட்டது.
இப்பணிகள் கழகத்திற்கு வழங்கப்பட்ட நிதிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டன. கொ/இந்துக் கல்லூரி இரத்மலானையின் ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர், கனடாவாழ் கழக உறுப்பினர், கொழும்பு கழக உறுப்பினர் அளித்த நன்கொடைகளிலிருந்து இப்பணிகள் செயற்படுத்தப்பட்டன.

Reviewed by Author
on
May 06, 2020
Rating:

No comments:
Post a Comment