சாப்பாட்டிற்காக இரண்டரை மைல்கள் நீள வரிசையில் நின்ற மக்கள் -
ஜோகன்னஸ்பர்க்கிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள செஞ்சுரியன் நகரில் ஊரடங்கு நடவடிக்கைகள் இதுவரை ஐந்து வாரங்களுக்கு மேலாக நீடித்துள்ள நிலையில்,
தொழில் நலிந்து ஏழைகளை ஒருவேளை உணவுக்காக காத்திருக்க வைக்கும் கொடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று Mooiplaas பகுதியில் சுமார் 8,000 உணவு பெட்டிகளை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளது.
கொரோனாவால் பொருளாதார நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு இந்த 8,000 எண்ணிக்கை என்பது மிக மிக குறைவு என்றே கூறப்படுகிறது.
இந்த 8,000 உணவு பெட்டிகளையும் சுற்றுவட்டாரத்தில் உள்ள இஸ்லாமிய சமூக மக்களே தயார் செய்துள்ளனர்.
பெரும்பாலான உணவு தொடர்பான உதவிகள் அனைத்தும் அரசின் எந்த பொருளாதார உதவியும் பெறாத தென்னாப்பிரிக்கர் அல்லாத மக்களுக்கே வழங்கப்படுகிறது.
சாப்பாட்டிற்காக இரண்டரை மைல்கள் நீள வரிசையில் நின்ற மக்கள் -
Reviewed by Author
on
May 02, 2020
Rating:

No comments:
Post a Comment