இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை!!!
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன் பெரியட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகையிரதத்திற்கு முன் பாய்ந்து மன்னாரை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்தவர் சமூக சேவையாளரும்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.ரகு சங்கர் (வயது-43) என தெரிய வந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை பெரிய கட்டு புகையிரத வீதிக்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு மன்னார் நோக்கி பயணித்த புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சடலம் மடு புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை பறையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்....
)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை!!!
Reviewed by Author
on
June 22, 2020
Rating:

No comments:
Post a Comment