இங்லீஷ் பிரீமியர் லீக்: வெற்றி பெற்ற செல்சியா அணி..
இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் அஸ்டன் விலா அணிக்கெதிரான போட்டியில், செல்சியா அணி வெற்றிபெற்றுள்ளது.......
விலா பார்க் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின.இதில் போட்டியின் 43ஆவது நிமிடத்தில் அஸ்டன் விலா அணியின் வீரரான கோர்ட்னி ஹோவ்ஸ் முதல் கோலை அடித்தார்.
இதன்பிறகு போட்டியின் 60ஆவது நிமிடத்தில் செல்சியா அணியின் வீரரான கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோலும், அணியின் மற்றொரு வீரரான ஒலிவர் கிரூட் 62ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.போட்டியின் இறுதியில் செல்சியா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை செல்சியா அணி 51 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. அஸ்டன் விலா 26 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தில் உள்ளது.

No comments:
Post a Comment