இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி....
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் பதிவாகும் 11வது மரணம் சற்று முன் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் குவைட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்பதுடன் ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அவரின் கையொப்பத்துடன் இந்த தகவல் வௌியாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 1633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment