4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்.....
இதுவரையில் கொரோனாவினால் 401,978 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் 6,970,937 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 3,411,074 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 1,988,544 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 112,096 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடான பிரேஸிலில் 673,587 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 35,957 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 20,000 இற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ரஷ்யாவில் 458,689 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 5,725 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,88,000 ஐ தாண்டியுள்ளது.
ஸ்பெயினில் இதுவரை 27,135 பேரும் பிரித்தானியாவில் 40,465 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 10,438 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 246,622 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 6,946 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:
Post a Comment