இன்று பரீட்சார்த்த தேர்தல்...........
இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணி வரை பரீட்சார்த்த தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்தப் பரீட்சார்த்த தேர்தல் இடம்பெறவுள்ளது. 200 வாக்காளர்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடாத்தும்போது எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை அறிந்துகொள்வதற்கே இந்த ஒத்திகைத் தேர்தல் நடாத்தப்படுகிறது. சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல், கிருமிநாசினிகளை பயன்படுத்துதல், தேசிய அடையாள அட்டையை கையில் தொடாது அதிகாரிகள் செயற்படுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார வழிமுறைகள் தொடர்பில் இதன்போது ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது....

No comments:
Post a Comment