கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. .........
ஊரடங்கு காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பல தனியார் பள்ளிகள் ஆன்லைனில், பாடங்களை நடத்த தொடங்கி
விட்டன.
ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், கர்நாடகாவில் எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை, ஆன்லைனில் பாடங்களை நடத்த தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம், பாடங்களை நடத்த தடையில்லை, என்றும் கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சில காரணங்களை, கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆன்லைனில் படிப்பு என்பது பள்ளிகளுக்கு சென்று படிப்பதற்கு ஈடாகாது எனவும், ஆன்லைனில் பாடங்களை நடத்தி முடிப்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் கிடைப்பது சிரமம் என கர்நாடகா அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment