அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் சங்கிலிய மன்னனின் 401ஆவது ஆண்டு நினைவு நாள்.............

சங்கிலி மன்னனின் நீத்தார் கடன் நிகழ்வுகள் நீர்நிலைகளில் நடைபெற உள்ளன. வடக்கே கீரிமலை தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை மேற்கே உடைப்புத் தொடக்கம் கிழக்கே கல்முனை வரை பல்வேறு ஊர்களில் ஆறுகள் குளங்களில் கடல் ஓரத்தில் மன்னன் சங்கிலியனுக்கு நீத்தார் கடன் செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.

தீநுண்மி பரவாமல் தடுப்பதற்காகச் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நீத்தார் கடன் நிகழ்வுகளில் ஒருவர் அல்லது இருவர் பங்கேற்பர்.

வெள்ளிக்கிழமை 12.06.2020 காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு சங்கிலியன் சிலைக்கு மாலை அணிவிக்க ஏணி வசதிகளை யாழ் மாநகரசபை செய்துள்ளது. மாலை அணிவித்த பின் யமுனா ஏரி சென்று பூத்தூவி வழிபட மூத்த குடிமக்கள் வருவர்.

சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கீரிமலைக் கடற்கரை தொடக்கம் கதிர்காமம் மாணிக்க கங்கை வரை இலங்கை முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் நீத்தார் கடன் நிகழ்வுகள் நடைபெறும். சைவ சமய முறைப்படி நடைபெறும் இந்நிகழ்வுகளில் சைவக் குருமார் பங்கேற்பர்.

இல்லத்தில் இருந்தவாரே இந்த ஆண்டு சங்கிலியன் நினைவை நீத்தார் கடன்களை மேற்கொள்ளுமாறு சைவத் தமிழ் அன்பர்களைகக் கேட்டுக்கொள்கிறோம். கூட்டமாகக் கூடி நீத்தார் கடன்களைச் செய்வது பொருத்தமானதல்ல. தீநுண்மி பரவலைத் தடுப்போம்.

(மறவன்புலவு கசச்சிதானந்தன் சிவசேனை)



தமிழ் சங்கிலிய மன்னனின் 401ஆவது ஆண்டு நினைவு நாள்............. Reviewed by Author on June 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.