புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு; சுகாதார அமைச்சு விடுக்கும் செய்தி........
இதுபோன்ற புதிய கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கும் உள்ளூர் சுகாதார சேவைக்கு அதிகமான உள்ளூர் தயாரிப்புகளை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆகவே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் அவற்றுக்கு தொழில்நுட்ப வசதிகளையும் மற்றும் நிதியுதவியையும் வழங்க உள்ளதாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க உபகரண வசதி, தொழில்நுட்ப வசதி மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளையும் இங்கு குறிப்பிடப்படாத வேறு எந்த யோசனைகளையும் இதற்காக முன்வைக்கப்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதுபோன்ற யோசனைகள் ஆரம்ப சுகாதார சேவைகள் அதிகாரமளித்தல் திட்டத்திற்கு முன்வைக்கப்பட்டால், அதனை நடைமுறைப்படுத்த தேவையான நிதியை வழங்கவும் தயாராக இருப்பதாக டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
மேலும் சுகாதாரத் துறையில் புதுமையான படைப்புகளை உருவாக்க விரும்புவோர் சுகாதார அமைச்சின் இணையத்தளமான www.health.gov.lk என்பதை பார்வையிடலாம் அல்லது அந்த செயற்றிட்டத்தின் இணைய முகவரியான www.pssp.health.gov.lk ஐயும் பார்வையிடலாம்
அல்லது விபரங்கள் மற்றும் பயன்பாடுகளுக்குக்கு .psspmoh.lk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பவும்.
புதிய படைப்பாளிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என டொக்டர் ஜயசுந்தர பண்டாரா சுட்டிக்காட்டினார்.
மேலதிக விபரங்களுக்கு 0112680549, 0718123858 என்ற இலக்கத்தின் ஊடாக இமேசா
அபேசேகர என்ற சுகாதார பிரிவின் அதிகாரமளித்தல் திட்ட உத்தியோகத்தரை
தொடர்புக்கொள்ள முடியும்.
புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு; சுகாதார அமைச்சு விடுக்கும் செய்தி........
Reviewed by Author
on
June 10, 2020
Rating:

No comments:
Post a Comment