கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்:இந்தியாவில் இருந்து திட்டத்தை செயற்படுத்திய புகுடு கண்ணா......
இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை இந்தியாவில் மறைந்து வாழும் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான புகுடு கண்ணாவின் திட்டம் என தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இது குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் நேற்று மாலை 6.39 அளவில் மாளிகாவத்தை சத்தர்ம விஹாரைக்கு முன்னாள் தாக்கப்பட்டார்.
அவர் தாக்குதலுக்கு உள்ள விதம் அருகில் இருந்த சி.சி.ரி.வியில் பதிவாகியிருந்தது.
இதேவேளை நேற்றிரவு போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரால் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே தாக்குதலின் பின்னணியில் புகுடு கண்ணாவின் திட்டம் உள்ளமை தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தாக்குதலை மேற்கொண்டு
தப்பியவர்களில் ஒருவர் சுவாமிநாதன் எனப்படும் புதா என தெரியவந்துள்ளது.....
கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்:இந்தியாவில் இருந்து திட்டத்தை செயற்படுத்திய புகுடு கண்ணா......
Reviewed by Author
on
June 19, 2020
Rating:

No comments:
Post a Comment