அண்மைய செய்திகள்

recent
-

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க ஜனாதிபதி வலியுறுத்தல்.....

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பது குறித்து  கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்து மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  வலியுறுத்துயுள்ளார்.

அரச அபிவிருத்து மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில்  இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரச அபிவிருத்து மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு இதனை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பிரதாய முறைகளில் இருந்து விலகி, அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களால் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஜானாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அரச அபிவிருத்து மற்றும் நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.பி.எம்.சந்தன உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க ஜனாதிபதி வலியுறுத்தல்..... Reviewed by Author on June 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.