இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்.....
நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.
´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.
ரூபவாகினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற
பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ´கற்பனைகள் கலைவதில்லை´ என்ற
நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்...
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்.....
Reviewed by Author
on
June 25, 2020
Rating:

No comments:
Post a Comment