ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் !!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (19) ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்..
அவர் மேலும் கூறுகையில்...
" 30 வருடகால போருக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ரீதியிலான தாக்கம் இன்னும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த கட்சி மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்த கேள்வியை எழுப்பும்போது அந்த கட்சியில் உள்ளவர்களே திருப்தியடைய முடியாத அளவுக்குதான் நிலைமை உள்ளது..
ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தெளிவான வெற்றியை பெற்று,
பலமானதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான சூழ்நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, முட்டிமோதும் அரசியலை கைவிடுத்து போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே நான் சுதந்திரக் கட்சியுடன் இருக்கின்றேன்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்.
அதேவேளை, காணாமல் போனோர் பிரச்சினை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு
தீர்வை காணவேண்டும் என்ற சிந்தனையிலேயே ஜனாதிபதியும் இருக்கிறார்." -
என்றார்.


ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னர் மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம் !!!
Reviewed by Author
on
June 19, 2020
Rating:

No comments:
Post a Comment