மன்னாாரில் 11 இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட தங்கத்துடன் ஒருவர் கைது.......
இலங்கை கடற்படை, மன்னார் பொலிஸ் குற்றவியல் புலனாய்வுத் துறையின் உதவியுடன், மன்னார் நகரில் 2020 ஜூன் 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 109 கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு மன்னார் நகரில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று மன்னார் பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவின் உதவியுடன் கடந்த 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ளது.
அப்போது மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை சோதனை செய்த கடற்படையினர், அவரிடமிருந்து 109 கிராமுக்கு மேற்பட்ட தங்கம் கண்டுபிடித்தனர்.
எந்தவொரு அனுமதிப்பத்திரமும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் குறித்த நபரையும் தங்கமும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாரு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபா 11 லட்சத்திக்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதான மன்னார் தாராபுரம் பகுதியில் வசிப்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் தங்கம் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மன்னாாரில் 11 இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட தங்கத்துடன் ஒருவர் கைது.......
Reviewed by Author
on
June 09, 2020
Rating:

No comments:
Post a Comment