சொய்சாபுர ஹோட்டல் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுனர் கைது.......
கடந்த 29 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெகன் ஆர் ரக காரை செலுத்திய சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நேற்று அதிகாலை 4.15 அளவில் கைது செய்தாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான மொறட்டுவ பகுதியை சேர்ந்த சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட ரி 56 ரக துப்பாக்கியை முச்சக்கர வண்டியொன்றில் வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு கொண்டுச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் வழங்கிய தகவல்களுக்கு அமைய மொறட்டுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் குழியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 2 ரவைகளையும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.....
சொய்சாபுர ஹோட்டல் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய வாகன ஓட்டுனர் கைது.......
Reviewed by Author
on
June 15, 2020
Rating:

No comments:
Post a Comment