அண்மைய செய்திகள்

recent
-

றிஸாட் பதியுதீனின் முயற்சியினால், இடம்பெயர்ந்தோருக்கான கொரோனா இடர் கொடுப்பனவை இவ்வாரம் வழங்க துரித நடவடிக்கை!

'கொரோனா' பாதிப்பினால் முடக்கப்பட்ட நாட்டின் பொருளாதார நிலையினையடுத்து, பொது மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு, வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில், அதனை அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால், சகலருக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நாட்டில் பெப்ரவரி மாதம் முதல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டதுடன், பொருளாதாரத்திலும் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது.

அதனையடுத்து அரசாங்கம் மக்களுக்கு நிவாரணமாக ஒரு தொகை நிதியினை வழங்கியது.
 ஆனால், இந்தக் கொடுப்பனவு வடக்கிலிருந்து இடப்பெயர்வுக்குள்ளாகி, புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாமலிருந்த வேளையில், இதனை பெற்றுக்கொடுப்பதில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.மதீன் உள்ளிட்டவர்கள் உரிய தரப்புக்களுடன் பேசியதுடன், வேண்டுகோள்களையும் முன்வைத்திருந்தனர்.

இருந்த போதும், ஏனைய பிரதேசங்களில் இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள் மக்களுக்கு வழங்கப்பட்ட போதும், இடம் பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இவைகள் கொடுக்கப்படாமையானது, இந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

 இது தொடர்பில், 'வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு', முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து, இந்த மக்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படாமலிருப்பது தொடர்பில், ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளைக் களைந்து, அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணிஆரச்சி ஆகியோருக்கு, எழுத்து மூலமான வேண்டுகோளினை அவர் விடுத்திருந்தார்.

அரசியல் பார்வைகளுக்கு அப்பால் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவது அவசியம் என்பதும் அவரினால் வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த இடர்கால கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகள், தயார்படுத்தல்கள் இடம்பெறுகின்றன.

அத்துடன், அதிகாரிகள் இதனை உரிய முறையில் வழங்க வேண்டுமென கோரியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தேவையற்ற அரசியல் தலையீடுகளை தவிர்த்துக்கொள்வதுடன், மக்களுக்கு இவை கிடைக்க உறுதிசெய்வது அதிகாரிகளின் கடமையென்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இவ்வாரம் இந்தக் கொடுப்பனவுகளை வழங்க ஆவணம் செய்யுமாறு, அரசாங்க அதிபர் மற்றும் சமூர்த்தி உதவி ஆணையாளரிடத்தில் அவர் முன்வைத்த வேண்டுகோளுக்கமைவாக, இந்த இடர்கால கொடுப்பனவை இவ்வாரம் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


றிஸாட் பதியுதீனின் முயற்சியினால், இடம்பெயர்ந்தோருக்கான கொரோனா இடர் கொடுப்பனவை இவ்வாரம் வழங்க துரித நடவடிக்கை! Reviewed by Author on June 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.